வடக்கு மாகாண தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டுள்ளது என்றுவடபகுதியைச் சேர்ந்த புத்திஜீவிகள் குற்றம் சாட்டியுள்ளனர் அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு,
விவகாரத்தில் இந்தியாவின் பின்னணி இருந்ததாக தற்போதுவெளிவந்திருக்கும் தகவல்கள் வடக்குத் தமிழ் புத்திஜீவிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும்,விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகிறது.இவ்விடயம் குறித்து இந்த வாரஇறுதியில் இடம்பெறவிருக்கும் தமிழரசுக் கட்சியின்மத்திய குழுக்கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் இடம் பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்குச்சென்று அங்கு ஆலோசனைகளை நடத்திவிட்டு முதலமைச்சர் வேட்பாளரைத் தீர்மானித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென தமிழரசுக் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவித்தார்.இது தொடர்பில் அந்த உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,இரு தசாப்தகாலப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு தமிழர்களின்தலைவிதியைத் தீர்மானிக்கும் வடமாகாணசபைத் தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளரை இந்தியா தீர்மானித்துவிட முடியாது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படக்கூடிய ஒருவரை வடக்குமுதலமைச்சராகத் தெரிவு செய்து மறைமுகமாக இலங்கை அரசுக்கு உதவி செய்யும் ஒருவிடயத்தை இந்தியா கனகச்சிதமாக அரங்கேற்றியுள்ளது. தமிழரசுக் கட்சியின்பிரமுகர்கள் அந்தப் பொறிக்குள் மிக இலகுவாகச் சிக்கிவிட்டனர். எவ்வாறாயினும்எதிர்வரும் 20ஆம் திகதி கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எமதுஆட்சேபனைகளைத் தெரியப்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment