இனவாத கூச்சல்களுக்கு கூட்டமைப்பு அஞ்சப் போவதில்லை எனவும் த.தே.கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.
கூட்டமைப்பின் வேட்பாளர்கள் நியமனக் குழு முதலாவது வது கூட்டத்தை நிறைவு செய்ததன் பின்னர் இந்தக் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
காலம் காலமாக தமிழர்களுடைய நியாயங்களுக்காக யார் போராடினாலும், யார் குரல் கொடுத்தாலும் அவர்களை புலிகள் என்றும், வெள்ளைப் புலிகள் என்றும், பச்சைப் புலிகள் என்றும், அல்லது பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள் என்றும் முத்திரை குத்துவதே இலங்கை அரசாங்கத்தின் தான்தோன்றித் தனமான போக்கு.
இதனடிப்படையிலேயே இப்போதும் விக்னேஸ்வரனுக்கும் எதிராக, அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட இனவாத குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
அரசினதும் அதன் இனவாத குழுக்களினதும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தே சிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.
நியாயமான அரசாங்கம் தமிழர்களுடன் பேசி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில்,ஒரு தீர்வினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையினையே இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.
இதற்காக சிங்கள இனவாத குழுக்களை ஏவி விட்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசவும் அவர்களுக்கு அனுமதியளித்திருக்கின்றது. இந்த அரசு.
தமிழர்கள் நாங்கள் காலம் காலமாக இந்த இனவாத கூச்சல்களை கேட்டு பழக்கப்பட்டுவிட்டோம். எனவே இந்தக் கூச்சல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை, இலங்கை சிங்களவர்களுக்குச் சொந்தமானதென சிங்களவர்கள் எப்படிச் சொல்வார்களோ, அதை விடப்பலமாக இது எங்கள் நாடு என்று நாங்கள் சொல்வோம் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment