Home » » முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவு, இன்னுமோர் யுத்தத்துக்கான ஆரம்பம்: சம்பிக்கவின் ஆணவம்

முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவு, இன்னுமோர் யுத்தத்துக்கான ஆரம்பம்: சம்பிக்கவின் ஆணவம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இன்னுமோர் யுத்தத்திற்கான ஆரம்பம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆணவத்துடன் தெரிவித்துள்ளார் .


 நீதியரசர் விக்னேஸ்வரனின் தெரிவு மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இனிவரும் காலங்களில் அரசியல் போராட்டமாக முன்னெடுக்கப்படுவதற்கான வழியேற்பட்டுள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தமிழர்களின் தனிநாட்டுக்கான போராட்டம் தற்போது வாதப் பிரதிவாதங்கள் மற்றும் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுவதற்கான வழிமுறையைக் கையாளத் தொடங்கியுள்ளது.

 முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை அதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும். தப்பித் தவறியேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலில் வென்றால், அடுத்த ஒரு மாதத்திற்குள் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும்போது அது இராணுவம் மற்றும் பொலிசார் இடையே மோதலை ஏற்படுத்தும்.

அந்நிலையில் சர்வதேசத்தின் உதவி தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கே கிடைக்கும். இதையெல்லாம் கருத்திற் கொண்டுதான் நாங்கள் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com