Home » » மூன்று மாகாணங்களுக்கும் அடுத்த வாரம் வேட்பு மனு கோரப்படும்

மூன்று மாகாணங்களுக்கும் அடுத்த வாரம் வேட்பு மனு கோரப்படும்

மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



 அத்துடன், மாகாண சபைகளை கலைப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு தனக்கு கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வட மாகாண சபை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com