நாம் அனைவரும் இணைந்து இதற்காக பாடுபடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வவுனியா நகரிலுள்ள வசந்தம் ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியினை எவரும் அழித்துவிட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேச ரீதியிலும் மக்கள் மத்தியிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை பேண வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.
வடமாகாண சபைத் தேர்தலில் வரலாற்றுத் திருப்புமுனையான வெற்றியினை நாம் பெறவேண்டும் வடமாகாண சபையில் உள்ள 36 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்களையாவது நாம் பெற வேண்டும். சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் வரலாற்றுத் திருப்புமுனையான வெற்றியினை பெற்றால்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும்.
வடமாகாண சபை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரில் ஜனநாயகம் பேணப்படவில்லை என்று யாரும் குற்றம்சாட்ட முடியாது. முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுக்கவில்லை. ஆனாலும் அவரும் இணைந்து நீதியரசர் விக்கினேஸ்வரனை வேட்பாளராக தெரிவுசெய்துள்ளார். இங்கு பலவந்தமாக முதலமைச்சர் வேட்பாளர் திணிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியிலேயே தெரிவு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியுடன் கடந்தவாரம் நான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். கடந்தவாரம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தார். அவர் ஜனாதிபதியை காலை 8 மணிமுதல் 10 மணிவரை அலரிமாளிகையில் சந்தித்து பேசியிருந்தார். அன்றைய தினம் 10.30 மணியளவில் ஜனாதிபதி என்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடனடியாக சந்தித்து பேச வேண்டுமென கேட்டுக்கொண்டார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் கலந்துரையாடிய பின்னரே இதுகுறித்து தீர்மானிக்கலாமென நான் அவரிடம் கூறினேன். பின்னர் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் கலந்துரையாடிய பின்னர் சந்திப்புக்கான நேரத்தினை வழங்கினேன். இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்புடன் தான் மீண்டும் பேச விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற தெரிவுக்கழு குறித்து அவர் எதுவும் பேசவில்லை.
அரசாங்கத்துடன் நாம் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். அரசாங்கம் இந்தப் பேச்சுவார்த்தையினை கபடத்தனமாக நடத்தினாலும்கூட நாம் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் செயற்பாட்டை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்ட வேண்டும். நான் இனியும் பேச்சுவார்த்தையில் ஏமாறப்போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேசம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே கூட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதற்கு எந்தவிலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வடக்கு மாகாணசபைக்கான வேட்பாளர் தெரிவில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு நாம் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment