சம்பந்தனின் கோபாவேசம் மீண்டும் கட்டுக்குள் வந்த பத்திரிகைகள்
வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை தமிழத்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தெரிவு செய்துள்ளதை எதிர்த்து சில பத்திரிகைகள் மேற்கொண்டு வரும் விசமத்தனமான விமர்சனங்களை நிறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டுப்பொறுப்புடன் தமிழத்தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இந்த நாளேடுகள் செயற்படுவது ஆரோக்கியமானது அல்ல என சம்பந்தன் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றின் நிர்வாக இயக்குநருடன் தொடர்பு கொண்ட சம்பந்தன் அவற்றின் விசமத்தனமான விமர்சனங்களை கண்டித்ததுடன் அது குறித்து தனது அதிர்ப்த்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்துவத்தை வைத்திருப்போர் அதற்கெதிராக வெளியில் செயற்படுவது குறித்த விசனங்களை சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனையடுத்து விமர்சனங்களை நிறுத்துமாறு இந்த நாளேடுகளின்; ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தனிப்பட்ட முறையில் சந்தித்து தமக்குரிய நலன்களை பெற்று மக்களை குழப்பும் நடடிவக்கைகளிற்கு ஊடகங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் சில தரப்பினரை வலியுறுத்திய சம்பந்தன் தமிழத்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்புகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார் என்றும் மற்றுமொரு தகவல்கள் கூறுகிறது.
இதேவேளை இந்த ஊடகங்கள்; தமது இன்றைய பதிப்பில் விக்னேஸவரனை விமர்சிப்பதை நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

.jpg)




.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment