Home » , » தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு உத்தரவு

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு உத்தரவு

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று தேர்தல் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சில முக்கிய கட்சிகள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ள காரணத்தினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் வாகனத் தொடரணியாக செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து திரும்பிச் செல்ல வேண்டுமென தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.

வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலானவர்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு இன்று விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com