மூன்று மாகாணங்களிலும் தனித்து யானைச் சின்னத்தில் போட்டியிடவும் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள 40 ஆசனங்களை பாதுகாக்கவும் 2450 வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விஷேட பொறிமுறையினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி மூன்று மாகாணங்களுக்குமான வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளது. பெரும்பாலும் திங்கட்கிழமை முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களையும் ஏனைய வேட்பாளர்களையும் தீர்மானித்து அறிவிக்க முடியும். ஐ.தே.க. ஆதரவாளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இத்தேர்தலானது ஆட்சியை மாற்றுவதற்கான ஒன்றல்ல. ஆனால் ஆட்சி மாற்றத்தின் ஆரம்பமாகவே கருதக் கூடியதாக உள்ளது.
எனவே, வாக்களிப்பு அவசியமானதாகும். அதேபோன்று ஆதரவாளர்கள் வாய் மூலமான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆளும் கட்சியில் போட்டியிட்ட பலர் இம் முறை ஐ.தே.க.வில் இணைந்துள்ளனர். அதேபோன்று வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் உள்ள 40 ஆசனங்களிலும் விஷேட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் எமது தேர்தல் பிரசார நடவடிக்கை பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment