தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சில கட்சிகள் கோரியிருந்தன. எனினும் தேசிய ரீதியான தேர்தல்களை தவிர்ந்த ஏனைய தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலின் உரிய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயம் எதிர்வரும் மூன்று மாகாண சபைகளின் தேர்தலின் பொருட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது, உரிய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமானது என்று தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய கூறினார்.
நாளை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் பிராந்திய தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேட்பு மனுவில் குறிப்பிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment