இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை வவுனியா நகரிலுள்ள வசந்தம் ஹோட்டலில் இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்தியகுழுக் கூட்டத்தில் வடமா காண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரி வில் மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கொ ண்ட விட்டுக்கொடுப்பையும் நீதியரசர் விக்கினேஸ்வரனின் நியமனத்தையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தினை மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கி. துரைராஜசிங்கம் முன்வைத்தார். இந்தத் தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
தீர்மானத்தை முன்மொழிந்த துரைராஜசிங்கம், தற்கால நாட்டு மற்றும் உலக நிலைமையினைக் கருத்தில்கொண்டு பெருமனதோடு முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி. பெரும் விட்டுக்கொடுப்பினை மேற்கொண்டுள்ளார். பலரும் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பிரேரித்தபோதிலும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்று மாவை சேனதிராஜா எம்.பி. விட்டுக்கொடுப்பை மேற்கொண்டுள்ளார். இதற்காக மாவை சேனாதிராஜா எம்.பி.யை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு முழுமனதோடு பாராட்டுகிறது.
இதேவேளை, இந்தப் பாரிய பொறுப்பினை ஏற்று புத்திஜீவிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நிலையில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வடமாகாணசபையின் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக பணியாற்ற முன்வந்துள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை இந்த குழு பாராட்டி கௌரவித்து வரவேற்கின்றது என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தின் முன்மொழிவினை மத்திய குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கும் தீர்மானித்தது.
இந்த மத்தியகுழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் மத்தியகுழு உறுப்பினருமான எஸ்.ரி.ஆர் தியாகராஜா கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கும் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கூட்டம் ஆரம்பமானதையடுத்து முதலமைச்சர் வேட்பாளர் நியமனம் தொடர்பில் கட்சியின் தலைவர் சம்பந்தன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விமர்சனங்களையடுத்து இரா. சம்பந்தன் எம்.பி. அதற்கு விளக்கமளித்தார்.
மத்தியகுழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், இ. சரவணபவான், எம்.ஏ. சுமந்திரன், பொன். செல்வராசா, தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளர் ந. வித்தியாதரன், யாழ். மாவட்ட கிளையின் மத்தியகுழு உறுப்பினர்களான சி.வி.கே. சிவஞானம், பொ. சிற்றம்பலம், மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மாகாண சபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் கட்சியின் துணைத்தலைவர் சோமசுந்தரம் ஆகியோரும் அம்பாறையிலிருந்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசன், திருமதி அன்னம்மா, ஏகாம்பரம் பரம் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment