Home » , » சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதற்கு இராணுவத்தை முகாம்களில் முடக்க வேண்டும்: ஆர்.சம்­பந்தன்

சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதற்கு இராணுவத்தை முகாம்களில் முடக்க வேண்டும்: ஆர்.சம்­பந்தன்

வட­மா­கா­ணத்தில் சுதந்­தி­ர­மான ஒரு தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மானால் இரா­ணுவம் முகாம்­களில் முடக்கப்­பட வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்கள் தெரிவு, தேர்­த­லுக்­கான ஆயத்­தங்கள் என்­பன பற்றி பிபிசி தமி­ழோ­சைக்குக் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைக் கூறி­யி­ருக்­கின்றார்.

அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தங்­க­ளது வேட்­பாளர் பட்­டியல் சம்­பந்­த­மாக பல­நாட்­க­ளாக ஆராய்ந்த பிறகு, இறுதி முடி­வுகள் ஏறத்­தாழ முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றன. எங்­க­ளு­டைய நிய­மனப் பத்­திரம் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் சில நாட்­களில் சமர்ப்­பிக்­கப்­படும். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் உள்ள ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்­று­கூடி, தங்­க­ளது வேட்­பா­ளர்கள் தொடர்­பாக ஏக­ம­ன­தாக முடி­வெடுத்து, நாங்கள் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து, மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­கான சகல ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

நிய­மனப் பத்­தி­ரங்கள் இன்னும் நிரப்­பப்­ப­ட­வில்லை. தாக்கல் செய்­யப்­ப­டவும் இல்லை. இந்த நிலையில் ஏனைய கட்­சி­களில் இருந்து அவற்றின் தலை­வர்கள் யாரா­வது போட்­டி­யிட விரும்­பினால் அதற்கு எந்­த­வி­த­மான ஆட்­சே­ப­னையும் இருக்க முடி­யாது. அப்­படி போட்­டி­யி­டு­வார்­க­ளே­யானால், அதற்குப் பரி­பூ­ர­ண­மான ஒத்­து­ழைப்பு அளிக்­கப்­படும். இட­து­சாரி கட்­சி­களின் ஆத­ரவை நாங்கள் வர­வேற்­கின்றோம். அதே­வி­த­மான எங்­க­ளு­டைய ஆத­ரவும் அவர்­க­ளுக்கு இருக்கும். வட­மா­கா­ண­சபைத் தேர்­தலைப் பொறுத்­த­மட்டில், விசே­ட­மாக அவர்­க­ளுக்கு வேட்­பா­ளர்கள் தெரிவில் ஒதுக்­கீ­டுகள் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக நான் கூற­மாட்டேன். ஆனால் அவர்­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­க­ளது பெயர்­களும் எங்­க­ளு­டைய பட்­டி­யலில் இருக்­கலாம். அந்­தக்­கட்­சி­க­ளு­டைய வேட்­பா­ளர்­க­ளாக எமது கட்­சியில் எவரும் போட்­டி­யி­ட­வில்லை. அவர்கள் முழுப்­பேரும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சார்ந்த கூட்­டுக்­கட்­சி­களின் வேட்­பா­ளர்­கள்தான். ஆனால் அவர்­க­ளு­டைய கருத்­துக்­களும் உள்­வாங்­கப்­பட்­டுத்தான் முடி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

இரா­ணு­வத்தைப் பொறுத்த வரையில் அர­சாங்கத் தரப்பில் செயற்­பட்டு, ஆளும் கட்­சிக்­காக வேட்­பா­ளர்­களைத் தேடு­வதில் அவர்கள் பங்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள். அதே­ச­ம­யத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் சார்பில் செல்­வாக்கைப் பெற்ற நபர்­களைத் தேர்­தலில் ஈடு­படக் கூடாது என்று அவர்­களை அச்­சு­றுத்தல் செய்­தி­ருக்­கின்­றார்கள். இவ்­வி­த­மான பல­வி­த­மான விட­யங்கள் பற்­றிய தக­வல்கள் எங்­க­ளுக்குத் தொடர்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்­றது.

ஆன­ப­டியால் இவை­யெல்லாம் இரா­ணுவம் நிய­மனப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கவே தங்­க­ளு­டைய அட்­டூ­ழி­யத்தை அர­சாங்­கத்தின் சார்பில் செயற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள் என்­பதை எடுத்துக் காட்­டு­கின்­றது. இது வர­வேற்­கத்­தக்க ஒரு விட­ய­மல்ல.

இது நிறுத்­தப்­ப­டா­விட்டால், இது வேறு வேறு பிரச்­சி­னை­க­ளுக்குக் கார­ண­மாக அமையும். தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாங்கள் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய பார்வையாளர்கள் வரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கின்றோம். இராணுவம் கட்டுப்படுத்தப்பட்டு, அவ ர்கள் தேர்தல் கருமங்களில் முழுமையாக ஈடுபடாமல் இருக்க வேண்டும். அரசாங்கம் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த விரு ம்பினால், இராணுவத்தை அவர்கள் தங்களுடைய முகாம்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com