அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளும் கல்வியியலாளர்களும் பல்லைக்கழக மற்றும் மாணவர்களும் இந்த வடமாகாண சபைத் தேர்தலில் மிக அவதானமாகவும் நேர்த்தியாகவும் வாக்களிக்கத் துணிந்துவிட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த வெற்றிக்கான சமிக்ஞை இன்று நேற்று காட்டப்பட்ட ஒன்று அல்ல. போர் நடைபெற்று இன்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த நான்கு ஆண்டுகளிலும்கூட மக்கள் கூட்டமைப்பைத்தான் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.
இலங்கை அரசு கூறும் அபிவிருத்தி என்பது ஊடகங்களில் மட்டுமே காட்டப்படுகின்றது. அபிவிருத்தி எனக் கூறும் புல்லுருவிகள் எதை அபிவிருத்தி எனக் காட்ட முயல்கின்றனர் என்பது புரியவில்லை. எமது சமூகம் இன்றும் பொய் வாக்குறுதிகளில் ஏமாந்து வாழ்ந்து மடிந்துவிடக்கூடாது. அனைத்து தமிழின உணர்வாளர்களும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய உணர்வுடன் தம்மை அர்ப்பணித்து செயலாற்ற முன் வர வேண்டும் - என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment