இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். இதனால் நேற்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற இந்த விருந்துபசார நிகழ்விற்கு விருந்தினர்கள் செல்வதற்கு முன்னர் பொலிஸாரும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பா.உ சந்திரகுமார் தன்னுடன் அழைத்துச் செல்லவிருந்த வடமாகாண தேர்தல் வேட்பாளரை இடைநடுவில் கைவிட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஆயினும் இறுதிவரை நிகழ்வில் கலந்து கொண்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆற்றிய உரைகள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு சென்றனர்.
இதனால் பா.உ சந்திரகுமார் கூட்டமைப்பினர் மீது கடுப்பாகியுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை பா.உ சந்திரகுமார் தொடர்ச்சியாக தேர்தல் வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment