Home » , » வடக்கு தேர்தலை சார்க் கண்காணிப்பாளர்கள் 17 பேர் கண்காணிப்பர்

வடக்கு தேர்தலை சார்க் கண்காணிப்பாளர்கள் 17 பேர் கண்காணிப்பர்

வட மாகாண சபைத்தேர்தலை கண்காணிப்பதற்கு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) கண்காணிப்பாளர்கள் 17 பேர் கண்காணிப்பதற்கு வருகை தருவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போதும் அரசாங்கம், அரச சொத்துக்களை தேர்தல்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 அத்துடன், வடக்கில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி கட்சி உறுப்பினர்களின் விபரங்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் திரட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com