Home » » நீதி சுதந்திரமாக வடக்கு தேர்தல் நடைபெறுமென்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு: இந்தியத் தூதுவர்

நீதி சுதந்திரமாக வடக்கு தேர்தல் நடைபெறுமென்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு: இந்தியத் தூதுவர்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல்கள் நீதியானதும் சுதந்திரமானதும் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த முறையில் அமையுமென தான் எதிர்பார்ப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா இது குறித்து தெரிவிக்கையில், இலங்கையில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கருத்துக்களை இலங்கை அரசுக்குத்தெரிவித்துள்ளதாகவும் தேசிய நல்லிணக்க செயற்கிரமத்தை மேலும் முன்கொண்டு செல்லக்கூடிய நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

 இந்தியாவின் 67 ஆவது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்று குறித்து இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்கான தேவைப்பாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழ் சமூகம் உள்ளிட்ட இலங்கை வாழ் அனைத்துப் பிரஜைகளும் தாங்கள் சமநிலைப் பங்காளிகளாகவும் சமத்துவம் நீதி, கெளரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வாழ்வொன்றை வாழும் இயலுமையைக் கொண்டு விளங்கும் உணர்வை உறுத்தும் பொருட்டு அரர்த்த புஷ்டியான அதிகாரப் பகிர்வு ஏற்பாடொன்று இருக்க வேண்டுமென்பதனையே இந்தியா விரும்புவதாகவும் அதில் அவர் மேலும் சுட்டியுரைத்துள்ளார்.

 இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கென சிறந்ததோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒப்பற்ற அரிய வாய்ப்பொன்றை ஆயுதப் போராட்டத்தின் முடிவு நிலை வழங்கியுள்ளதெனவும் உயர் ஸ்தானிகர் அழுத்தியுரைத்துள்ளார்


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com