Home » , , , , » பூநகரியில் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை-படங்கள்

பூநகரியில் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை-படங்கள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை பூநகரிப் பிரதேசத்தின் கிராஞ்சிப் பகுதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் சி.சுப்பையா, ம.அன்ரன் டானியல், சு.தயாபரன், வி.சுவிஸ்கரன்,மா.சுகந்தன், கட்சி செயற்பாட்டாளர் கி.வீரவாகுதேவர் ஆகியோருடன் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 இந் நிகழ்வில் வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் இலக்கம் ஐந்தில் போட்டியிடும் திரு.த.குருகுலராஜா அவர்கள் தமது கருத்தினை வெளிப்படுத்தும் போது, “எமது மக்களுக்கு அபிவிருத்தி வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனாலும் அதை விட எமது உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு எமக்கு ஒரு சர்வதேச விசாரணை எமக்குத் தேவை” எனக் கூறினார்.

 இத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம்,சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.






0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com