அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
தேர்தல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல்கள் பிரதி ஆணையாளர் தலைமையில் விசேட அறிவுறுத்தல் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இதற்கிணங்க இன்று காலை மன்னாரிலும் மாலையில் யாழ்ப்பாணத்திலும் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. நாளை செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சியிலும் மாலை வவுனியாவிலும் 14 ஆம் திகதி காலை முல்லைத்தீவிலும் தேர்தல் ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இக்கருத்தரங்குகளில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு மேலதிகமாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் பிராந்திய உயரதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொள்வர்.
தேர்தல் சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற் கொள்ளல் விளம்பரம், சுவரொட்டிகள், பதாகைகள் என்பவற்றை வெளியிடு வதிலுள்ள மட்டுப்பாடுகள் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய தவறான நடத்தைகள் ஊழல் குற்றங்கள், தேர்தல் சட்டத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள சட்ட முரணான பழக்கங்கள் என்பன பற்றியும் இக்கருத்தரங்கின் போது விளக்கமளிக்கப்படுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் தேர்தல் முடிவடையும் வரை பிரசார நடவடிக்கைகளுக்காக நடை பவனி, ஊர்வலங்கள் மற்றும் வாகன பவனி என்பன முன்னெடுக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட வேண்டுமென விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் தொடர்பிலும் வேட்பாளர்கள் மற்றும் பொலிஸ் உயரதி காரிகளுக்கு இதன்போது விளக்கமளிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் வாக்களிப்பின் போதும் வாக்குகளை எண்ணும் போதும் தமது பிரதிநிதிகளை குறித்த இடங்களில் நியமனம் செய்வதற்கான சலுகைகள் பற்றி இதன் போது எடுத்துக் கூறப்படும்.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கினை தேர்தல் திணைக்களத்தின் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதி அல்லது உதவி தேர்தல் ஆணை யாளர்கள் நெறிப்படுத்துவர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment