வடக்கு மக்களின் தேவைகளைப் பற்றி சிந்திக்காத சம்பந்தன் கூட்டணி எவ்வாறு தமிழர்களை பாதுகாக்கப் போகின்றது எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தைப் பற்றி தவறாக விமர்சிக்கும் சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றோர் இந்தியாவின் செயற்பாடுகளை அனுசரித்து வாய் மூடிச் செயற்படுகின்றனர்.
13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபை போன்று இந்தியாவின் திட்டங்களை எமது நாட்டிற்குள் திணிக்கவிட்டு எம் நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் கொள்ளையடிக்கின்றனர். இதை நன்றாக விளங்கிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாயை மூடி செயற்படுகின்றனர். அரசாங்கம் வடக்கு மக்களை ஒரு போதும் கைவிடப் போவதில்லை.
விக்னேஸ்வரன் சம்பந்தன் என எவர் நாட்டினைக் குழப்பினாலும் இந்த அரசாங்கம் யாரையும் விடப்போவதில்லை. பத்தரமுல்லையில் நேற்று தேசிய சுதந்திர முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

.jpg)




.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment