Home » , » யாழில் தேர்தல் சட்டத்தை மீறி அரசியல் கட்சியொன்று ஆசிரியர்களுக்கான கூட்டத்திற்கு ஏற்பாடு: பெப்ரல்

யாழில் தேர்தல் சட்டத்தை மீறி அரசியல் கட்சியொன்று ஆசிரியர்களுக்கான கூட்டத்திற்கு ஏற்பாடு: பெப்ரல்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்டத்தை மீறி அரசியல் கட்சி ஒன்று, ஆசிரியர்களுக்கான கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியொன்று இந்த கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்துள்ளது. இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த அமைப்பு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை 30 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com