Home » » வவு­னியா மாவட்­டத்தில் 12 அர­சியல் கட்­சி­களும் 8 சுயேச்சை குழுக்­களும் வேட்பு மனுத்தாக்கல்

வவு­னியா மாவட்­டத்தில் 12 அர­சியல் கட்­சி­களும் 8 சுயேச்சை குழுக்­களும் வேட்பு மனுத்தாக்கல்

வவு­னியா மாவட்­டத்தில் 12 அர­சியல் கட்­சி­களும் 8 சுயேச்சை குழுக்­களும் வேட்பு மனுத்தாக்கல் செய்­தி­ருப்­ப­தாக வவு­னியா மாவட்ட அரச அதி­பரும் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரி­யு­மான பந்­துல ஹரிச்­சந்­திர தெரி­வித்­துள்ளார்.
நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் முடி­வ­டைந்த காலக்­கெ­டு­வுக்குள் சமர்ப்­பிக்­கப்­பட்ட வேட்பு மனுக்­களைப் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­பட்­ட­போது, செல்­லத்­துரை விஜ­ய­குமார் என்­ப­வ­ரு­டைய தலை­மையில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த சுயேச்சை குழுவின் வேட்பு மனுவில் தலைமை வேட்­பாளர் கையெ­ழுத்­திட தவ­றி­யி­ருந்­த­மை­யினால் அந்த மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து வவு­னியா மாவட்­டத்தில் வட­மா­காண சபைத் தேர்­தலில் 12 அர­சியல் கட்­சி­களும் 7 சுயேச்சை குழுக்­களும் போட்­டி­யி­ட­வுள்­ளன.
வட­மா­காண சபைக்­கான வவு­னியா மாவட்­டத்தின் 6 ஆச­னங்­க­ளுக்­காக 171 வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்­சி­க­ளி­னாலும், சுயேச்சை குழுக்­க­ளி­னாலும் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
வேட்பு மனுக்கள் தொடர்­பாக ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தற்­காகக் கூட்­டப்­பட்­டி­ருந்த கூட்­டத்தில் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், சுயேச்சை குழுக்­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர். வவு­னியா அர­சாங்க அதிபர் தலை­மையில் இந்தக் கூட்டம் நடை­பெற்­றது. இதில் வவு­னியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணை­யாளர் ஏ.எஸ்.கரு­ணா­நி­தியும் சமு­க­ம­ளித்­தி­ருந்தார்.

அங்கு உரை­யாற்­றிய அர­சாங்க அதிபர் தெரி­வித்­த­தா­வது:
எதிர்­வரும் செப்ெ­டம்பர் மாதம் 21 ஆம் திகதி இந்தத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது. வட­மா­காண சபைக்­கான தேர்­த­லா­னது விசே­ட­மா­னது. ஏனெனில் முதல் தட­வை­யாக இந்தத் தேர்தல் நடத்­தப்­ப­டு­கின்­றது. இந்தத் தேர்­தலை வெளி­நா­டு­களும் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்தத் தேர்தல் சுதந்­தி­ர­மாக நடத்­தப்­படும். அதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. வன்­மு­றைகள் இல்­லாமல் சட்­ட­திட்­டங்­க­ளுக்­க­மை­வாக நியா­ய­மான முறையில் இது நடை­பெறும்.

நாங்கள் எந்­தக்­கட்­சிக்கும் ஆத­ர­வா­ன­வர்கள் அல்ல. எங்­க­ளுக்கு ஆண் பெண் என்ற இரண்டே இரண்டு கட்­சி­களே உள்­ளன. அரச அதி­கா­ரி­க­ளான எங்­க­ளுக்கு இரண்டு பொறுபுக்கள் இருக்­கின்­றன. ஒன்று நாங்கள் தேர்தல் ஆணை­யா­ள­ருக்குப் பொறுப்பு கூற வேண்டும். மற்­றது, சட்டம் அத்­துடன் நீதி­மன்­றத்­திற்கும் நாங்கள் பொறுப்புக் கூற­வேண்டும். எனவே இந்தத் தேர்­தலை சரி­யான முறையில் நாங்கள் நடத்­துவோம். என்னைப் பொறுத்­த­வ­ரையில் பத்து, பதின்­மூன்று ஆண்­டுகள் தேர்­தல்கள் நடத்­து­வதில் அனு­பவம் பெற்­றி­ருக்­கின்றேன்.
அரச சொத்­துக்­களை இந்தத் தேர்­தலில் பயன்­ப­டுத்த முடி­யாது. நகரும் மற்றும் நக­ராத அரச சொத்­துக்­க­ளையும், ஆள­ணி­யா­கிய அரச ஊழி­யர்­க­ளையும் தேர்­தலில் நன்மை பெறு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்த முடி­யாது. அதற்கு அனு­ம­தி­யில்லை.

இந்த மாவட்­டத்தில் 94 ஆயி­ரத்து, 367 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­ப­தற்குத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றார்கள். இவர்கள் 89 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் வாக்­க­ளிப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடை­பெற்ற வாக்­காளர்; புதுப்­பித்தல் நட­வ­டிக்­கை­யின்­போது பதிவு செய்­யாத வாக்­கா­ளர்கள் தொடர்பில் எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளை­ய­டுத்து, இந்த வாக்­காளர் எண்­ணிக்­கையில் சிறிய மாற்றம் ஏற்­ப­ட­வுள்­ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com