Home » , , » “13ஐ அழிக்க நினைக்கும் பேரினவாதிகளின் கனவு பலிக்காது”

“13ஐ அழிக்க நினைக்கும் பேரினவாதிகளின் கனவு பலிக்காது”

13 ஆவது திருத்தச் சடட்டத்தின் பூரண காப்பாளனான இந்திய வல்லரசு இருக்கிறது. இதனை இல்லாதொழித்து விடலாம் என்ற பேரினவாதிகளின் கனவு என்றைக்கும் பலிக்காது என்று வடமாகாண சபையின் வேட்பாளர் வைத்திய கலாநிதி சி.சிவமோன் தெரிவிதார்.

இவர், வடமாகாண சபைத் தேர்தலில் முல்லை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய், கொக்குதொடுவாய் பிரதேச மக்களைச் சந்தித்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய், கொக்குதொடுவாய் பிரதேசங்களில வாழ்ந்த மக்கள் தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை பறிகொடுத்து வருகின்றோம். எதிர்கால சிங்கள குடியேற்றத்தின் ஆரம்பமாக கொக்குளாயில் எமது காணிகள் அரசு கனகச்சிதமாக சுவீகரித்து வருகின்றது.எமது வயல் காணிகளைக் கூட பலாத்காரமாக பறிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துவரும் எமக்கு இது தொடர்பில் முறையிட எவரும் இல்லை அவ்வாறு முறையிட்டாலும் அசடையான ஏளன சிரிப்புடன் பதில்சொல்லும் மாற்றுமொழி அதிகாரிகள் எம்மைப்படுத்தும் வேதனைகள் சொல்லில் அடங்காதவையாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தையும் அரசு கனகச்சிதமாக திட்டமிட்டு செய்து வருகிறது. எமது பிரதேசத்தின் காடுகளுக்குள்ளேயே வீதிகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இவை எதிர்கால சிங்களகுடியேற்றத்திற்கான முன்னோடி நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று என்று அப்பகுதி மக்கள் வேட்பாளரிடம் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த வைத்திய கலாநிதி அரசின் இவ்வாறாக செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு நாம் ஒருமித்து உமது எதிர்பை வெளிப்படுத்தவேண்டும். அத்துடன் நடைபெறவுள்ள அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிக்கு அனைத்து மக்களும் பங்களிப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு வெற்றி பெற்றால் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 13 ஆவதுதிருத்தச் சட்டம் என்பது 1988 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.இதன் பூரணகாப்பாளனாக இந்திய பேரரசு இருக்கிறது. எனவே, இதை சுக்குநூறாக உடைத்துவிடலாம் எனக்கங்கணம் கட்டிநிற்கும் பேரினவாதிகளின் கனவு பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.

எனவே, மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற செய்வது இன்றைய தேவையாக இருக்கின்றது முல்லை மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆனைத்து ஆசனங்களையும் கைப்பற்றும் விதத்தில் நூறுவீத வாக்களிப்பை உறுதிபடுத்துவது இந்த மாவட்ட மக்களின் முதல் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com