இது தொடர்பாக குறித்த மூன்று மாகாணங்களிலுமுள்ள 10 மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்களுடனும், கட்சிச் செயலாளர்களுடனும் நாளை மறுதினம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்துரையாடவுள்ளார் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்தார்.
முறைப்பாடுகள் 87 வடக்கு, வடமேல், மத்திய முதலான மூன்று மாகாணங்களிலும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 87 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றுள் மத்திய மாகாணத்திலேயே ஆகக் கூடுதலாக 37 முறைப்பாடுகளும், வடமேல் மாகாணத்தில் 30 முறைப்பாடுகளும், வடமாகாணத்தில் 19 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment