மாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேரே இத் தபால் வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிணங்க தபால் மூலம் வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்திலிருந்து வருகை தரவுள்ள 17 பிரதிநிதிகள் வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment