Home » » அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை நாளை மறுதினம் தேர்தல்கள் செயலகத்திற்கு  சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல்களை அவர்களுக்கு வழங்குவதற்காகவே தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் சட்ட மீறல்கள், தேர்தல் வன்முறைகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் என்பவற்றுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக குறிப்பிடப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com