Home » » வடமாகாண தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடும் 5 உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியது?

வடமாகாண தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடும் 5 உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியது?

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிடும் கட்சியின் முடிவுக்கு மாறாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து உயர்பீட உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இல்ஹாம்,கரீம், முதாஜித், நஜாத், ஜெகியா ஆகியோரு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்று கட்சி ஒருமனதாக முடிவெடுத்துள்ள நிலையில், அதனை அவமதிக்கும் வகையில், செயற்பட்டுள்ள ஐந்து பேரையும் கட்சியை விட்டு நீக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com