கடந்த 30 வருடங்கள் பல்வேறு இன்னல்களை அடைந்த தமிழ் மக்கள் தமது சுய உரிமையையும் சுய கௌரவத்தையும் பெற்றுக்கொள்ளும் தருனமாக வடமாகான
சபைத்தேர்தல் அமைந்துள்ள நிலையில் ஒட்டு மொத்த தமிழர்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பின் அணிதிரன்டு தமிழர்களின் பலத்தை இந்த அரசிற்கு வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் இருதய நாதன் சாள்ஸ் தெரிவித்தார்.
நடைபெறவிருக்கும் வடமாகாண சபை தேர்தலை உலக நாடுகள் மிகவும் நுன்னியமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
கடந்த 30 வருடங்களாக எமது தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள இந்த வடமாகாண சபை தேர்தல் எமக்கு களம் அமைத்துள்ளது.
தமிழ் மக்களின் சுய உரிமையை வெண்றெடுக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு அன்று முதல் இன்று வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தில் எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களையும் இழப்புக்களையும் எம்மால் கணக்கிட முடியாது.
ஆனால் இந்த தேர்தலின் ஊடாக இறந்த உறவுகளின் கனவுகளை நினைவாக்க அணிதிரண்டு போராட முடியும்.
எமது மக்களை அடிமைகளாக்கி வேடிக்கை பார்க்கும் இந்த அரசுக்கு தமிழர்களின் பலம் என்ன என்று காட்ட வேண்டும்.
நாங்கள் சலுகைகளுக்கு அடிமைககி விடக்கூடாது.மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்படுகின்ற சகல வித வேலைத்திட்டங்களும் பக்கச்சார்புடன் இடம் பெற்று வருகின்றது.
வேலைவாய்ப்புக்களாக இருந்தாலும் சரி வீட்டுத் திட்டங்களாக இருந்தாலும் சரி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டுள்ளவர்களுக்கே வழங்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் நில அபகரிப்பு கலாச்சார சீரழிவு தமிழ் தேசியம் மீள் குடியேற்றம் காணமல் போனவர்களை கண்டுபிடித்தல் போன்றவற்றிற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தின் தேவையில் உள்ளோம்.
நாங்கள் தமிழினம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.எமக்கு சுய கௌரவம் உள்ளது.
எனவே தமிழ் மக்கள் இந்த வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களில் இருந்தும் தமிழர்கள் அடிமைகள் என்ற நாமத்தில் இருந்தும் விடுதலை பெற அணைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் இருதய நாதன் சாள்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment