Home » » கூட்டமைப்புக்கு வடக்கில் ஆட்சியமைக்க இடமளிக்க போவதில்லை!- ஓமல்பே சோபித தேரர்

கூட்டமைப்புக்கு வடக்கில் ஆட்சியமைக்க இடமளிக்க போவதில்லை!- ஓமல்பே சோபித தேரர்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க இடமளிக்க போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டு வருவது மட்டுமின்றி, சம்பந்தன் குழுவினர் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

 இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளதுடன் நாடாளுமன்றத்திலும் நடவடிக்கை எடுப்போம். அப்பாவி தமிழ் இளைஞர்களை தூண்டி விட்டு மீண்டும் பலிக்கடாவாக்கும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரத்தவெறி கொண்டு அலைகின்றது.

 சிங்கள மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கூட்டமைப்பிற்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம். தனி நாடு, சுயநிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி என்பவற்றை கைவிடாது போனால் கூட்டமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com