Home » , , » வாக்களிப்பு நிலையத்தின் முன் நடமாடிய சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த மாவை

வாக்களிப்பு நிலையத்தின் முன் நடமாடிய சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த மாவை

தெள்ளிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞனொருவரை பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்நபரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

 இது குறித்து மேலும் தெரியவருவது, தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெள்ளிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

 இதன்போது அப்பகுதியில் இளைஞரொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடி வருவதை மாவை சேனாதிராஜா அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த இளைஞனிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அவ்விளைஞன் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அந்நபரை அவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com