Home » » தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தமிழ் கூட்டமைப்பு மீண்டும் யுத்தப்பிரகடனம் : தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக ஹெல உறுமய அறிவிப்பு

தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தமிழ் கூட்டமைப்பு மீண்டும் யுத்தப்பிரகடனம் : தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக ஹெல உறுமய அறிவிப்பு

வட மாகாண சபைத் தேர்­த­லுக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் ஊடாக எம்­மீது மீண்டும் யுத்­தம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த யுத்­தத்தை ஏற்­றுக்­கொள்­ளவும் அதனை எதிர்­கொள்­ளவும் நாங்கள் தயா­ரா­கி­விட்டோம்.

பிர­பா­க­ர­னுக்கே அச்­சப்­ப­டாத நாங்கள் விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு அச்­சப்­ப­ட­மாட்டோம். எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முயற்­சி­களை தோற்­க­டிக்க நாட்டு மக்­களை இணைத்­துக்­கொண்டு களத்தில் இறங்க தயா­ரா­கி­விட்டோம் என்று ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ளவு அழி­வுகள் இடம்­பெற்ற பின்னர் கூட தமிழ்க் கூட்­ட­மைப்பு மாற்­ற­ம­டை­ய­வில்லை. அவர்கள் தமது மூன்­றா­வது யுத்­தத்தை தற்­போது ஆரம்­பித்­துள்­ளனர். இதற்கு பின்­னரும் எம்மால் பொறுத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. ஆயு­தங்­களை ஏந்­து­மாறு தமிழ்த் தலை­வர்கள் கூறும்­போது நாங்கள் வெறு­மனே இருந்­து ­கொண்­டி­ருக்க முடி­யாது என்றும் ஹெல உறு­மய குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு வடக்குத் தேர்­த­லுக்கு முன்னர் தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­கப்­போ­வ­தில்லை என்­பது உறு­தி­யா­கி­விட்­டதால் அக்கு­ழு­வி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு தீர்­மா­னித்­து­விட்டோம். இனி பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளி­யே­யி­ருந்து பிரி­வி­னை­வா­தத்­துக்கு எதி­ராக போரா­டப்­போ­கின்றோம் என்றும் ஜாதிக ஹெல உறு­மய எச்­ச­ரித்­துள்­ளது.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com