Home » » வட மாகாண ஆளுநருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைபாடு.

வட மாகாண ஆளுநருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைபாடு.

வட மாகாண ஆளுநருக்கு எதிராக , டிரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் இலங்கை நிறுவனம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்துள்ளது . இரண்டு காரணங்களின் அடிப்படையில் இந்த முறைபாட்டை செய்துள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடல் மற்றும் அரசாங்க ஊழியர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தல் போன்ற விடயங்கள் , வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு எதிராக முறைபாடு செய்வதற்குரிய காரணிகளாக அமைந்துள்ளன என்றும் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் இலங்கை நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . 

 தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பங்களை எடுத்துக்காட்டும் நிழற்படங்கள் சிலவற்றையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது .

 பொதுமக்களின் பணம் மூலம் சம்பளம் பெறுகின்ற மாகாணத்தின் உச்ச பதவியை வகிப்பவரும் , வட மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் பிரதம அதிகாரியுமான ஆளுநர் , ஏதேனும் அரசியல் கட்சியொன்றின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுவது , நீதியான தேர்தல் ஒன்றிற்கான மார்க்கத்திற்கு தடையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதால் அதுகுறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் இலங்கை நிறுவனம் , மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com