வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலில், ஐந்து மாவட்டங்களில் அரை வெளிப்படைத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
பரீட்சார்த்தமாகவே இந்த வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி, மாத்தளை, குருநாகல், யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன
.
பயன்படுத்துவதற்கு இலகுவான பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளையே பல்வேறு நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.
இவற்றை பரீட்சார்த்தமாக பயன்படுத்தவுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
.
250 வரையிலான பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment