Home » , » கபே கண்காணிப்பாளர் மீது தாக்குதல்: கிளிநொச்சி சாந்திபுரத்தில் சம்பவம்

கபே கண்காணிப்பாளர் மீது தாக்குதல்: கிளிநொச்சி சாந்திபுரத்தில் சம்பவம்

கிளிநொச்சியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கபே அமைப்பின் உறுப்பினரொருவர் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 

 குணராசா (43) என்ற கண்காணிப்பாளரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு மேலும் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி சாந்திபுரம் பகுதியில் வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் குறித்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் வாக்களர்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை வழங்கிக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com