வடக்குமாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புகள் யாவும் இன்று மாலை 4 மணியுடன் முடிவுற்றுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கென்னும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
பிரத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் வண்டிகளிலேயே மேற்படி வாக்குப் பெட்டிகள் வந்து சேர்ந்துள்ளது.
நெடுந்தீவு பகுதி பகுதியில் சேகரிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் மட்டும் அதிவேகப்படகில் குறிகட்டுவான் வரைக்கும் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பிரத்தியோக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியினை வந்தடைந்தவுடன், வாக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் உடனடியான ஆரம்பிக்கப்படும் என்று தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment