Home » , , » மக்கள் சரியான நேரத்தில் ஆணையை கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர்: பா.உறுப்பினர் பொன்.செல்வராசா

மக்கள் சரியான நேரத்தில் ஆணையை கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர்: பா.உறுப்பினர் பொன்.செல்வராசா

நடைபெற்று முடிந்த வட மாகாணசபை தேர்தல் முடிவானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை மக்களுக்கான உரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மக்கள் சரியான நேரத்தில் சரியான ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர். 

 வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வழங்குமாறு மக்களிடம் கேட்டு இருந்தோம். ஆனால் அதையும் தாண்டி அதற்கு மேலால் மக்கள் ஆணையை தந்துள்ளனர். அதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைவதுடன் இந்த மகிழ்ச்சியில் கிழக்கு மாகாண தமிழ் மக்களும் இணைந்து கொள்கின்றனர். 

 தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறை படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படும். தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இந்த மாகாணத்தில் ஒன்றிணைந்து வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம் தமிழ் பேசும் சமூகங்கள் சுதந்திரமாக வாழ வழி வகுப்பதுடன் இந்த பாரிய வெற்றியில் கிழக்கு மாகாண மக்களும் இணைந்து கொள்கின்றனர்.

 இந்த பாரிய வெற்றிக்கு காரணமாக இருந்த வடமாகாண மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார். 


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com