தமிழ்த் தலைவர்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விவகாரங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ் அரசியல் தலைவர்கள் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான மூன்றாம் வாசிப்பு விவாத நிறைவு உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனப் பிரச்சினை மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்
.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் கை கோர்த்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதனைப் போன்றே வட மாகாணசபை வரவு செலவுத் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆக்கபூர்வமான முறையில் விமர்சனங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை நல்வழிப்படுத்துமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சிகளை கோரியுள்ளார்.
உள்ளக முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக திகழ முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்க சாத்தியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் பிழையானது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பிழையானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment