வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய
நிறுவனம் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரண்டு பேருந்துகளை அன்பளிப்புச் செய்துள்ளது .
இப்பேருந்துகளை முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களங்களிடம் வடக்கு மாகாண விவசாய , கமநல சேவைகள் , கால்நடைஅபிருத்தி , நீர்ப்பாசனம் , மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ . ஐங்கரநேசன் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்
.
கையளிக்கும் நிகழ்வுகள் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது .
அதன்படி அமைச்சர் பொ . ஐங்கரநேசனிடம் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பேருந்தை முல்லை . மாவட்டத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் த . யோகேஸ்வரனும் , மன்னார் மாவட்டத்துக்கான பேருந்தை மன்னார் மாவட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் பொ . அற்புதச்சந்திரனும் பொறுப்பேற்றுக் கொண்டனர் .
இப் பேருந்துகள் விவசாய அறிவுசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகளினதும் விவசாயப் போதனாசிரியர்களினதும் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ளன என இதேவேளை மாகாண விவசாயப் பணிப்பாளர் சி . சிவகுமார் தெரிவித்துள்ளார் .







.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment