Home » » வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நியமிக்க புத்திஜீவிகள் எதிர்ப்பு!

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரனை நியமிக்க புத்திஜீவிகள் எதிர்ப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னால் நீதியரசர் சி.வி விக்கினேஸ்வரனை முன்னிறுத்துவதற்கு வடக்கு புத்திஜீவிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேடபாளராக மாவை சேனாதிராஜா, முன்னால் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக புத்திஜீவிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 சி.வி விக்கினேஸ்வரன் 30 வருடங்களுக்கு மேலாக அரசில் பணியாற்றியுள்ளார். அத்துடன் வடக்கை விடவும் கொழும்பிலேயே அதிக காலம் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அவரால் சரிவர புரிந்துகொள்ள முடியாது என்று தெரிவித்து அவரது தெரிவை வடக்கு புத்திஜீவிகள் எதிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது நாளாக இன்று கொழும்பில் நடைபெறும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com