Home » , » வடக்கு தேர்தலுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்: மஹிந்த

வடக்கு தேர்தலுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்: மஹிந்த

வட மாகாண சபைத்தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவார்கள். பல்வேறு அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


இது தொடர்பில், கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடப்படுவதுடன் எந்தெந்த அமைப்புகள் மற்றும் நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பது என்பது தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வட மாகாண சபைத்தேர்தல் முதன்முறையாக நடத்தப்படுவதனால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பது யோக்கியமானதாகும். 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com