வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடுகள் தொடர்பான இழுபறி நிலைமை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் கட்சிளின் ஆசனப் பங்கீடுகள் திருப்திகரமாகப் பங்கிடப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், யாழ். மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ் 4 ஆசனங்கள், ரெலோ 3 ஆசனங்கள், புளொட் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரொலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகியவற்றுக்குத் தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3 ஆசனங்கள். இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்களும் புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆசனப் பங்கீடுகள் முடிவடைந்துள்ள நிலையில் நாளை வேட்பாளர்களின் பெயர் விவரங்களை கட்சிகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment