ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் கட்சி தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அக்கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
இந்த அழுத்தம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட அதியுயர் பீட உறுப்பினர்களினால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அழுத்ததின் பின்னணியில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை தேர்தல் உட்பட செப்டம்பரில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என கடந்த ஜுன் 13ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட அதியுயர் பீட கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது.
இதற்கான அழைப்பு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலியினால் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதியுயர் பீட தீர்மானத்தில் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதனால் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்காகவே ஜனாதிபதியை அரச முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணி நேரமாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஆளும் கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் பின்னரே ஜனாதிபதியை சந்தித்து பேசுவது என இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாக சிரேஷ்ட அமைச்சர் பௌசி நியமிக்கப்பட்டுள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment