Home » , » தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம்

தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.


 ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களிலுள்ள அரசாங்க ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 முப்படையினர் மற்றும் பொலிஸ் உறுப்பினர்களும் தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.

 இதேவேளை, அச்சத்தின் காரணமாக தமது வதிவிடங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு, அவர்கள் விரும்பிய வாக்களிப்பு நிலையமொன்றில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கோரி விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com