Home » , , » மாகாண சபை தேர்தலில் எம்.பி.க்கள் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது -அரசு தீர்மானம்

மாகாண சபை தேர்தலில் எம்.பி.க்கள் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது -அரசு தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


 அதேபோல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தமது பதவியை இராஜினாமா செய்து விட்டு அரசுடன் இணைந்து கொள்ள உத்தேசித்துள்ளவர்களுக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதெனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

 முன்னர் மாகாண சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில எம்.பி.க்களும் அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டு வடமேல் மற்றும் மத்திய மாகாண தேர்தல்களில் போட்டியிட முன் வந்துள்ளதை முன்னாள் மாகாண சபைகளின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் விரும்பவில்லை என்றும் அவர்கள் கூட்டாக இது குறித்து தமது எதிர்ப்பை அரசின் உயர் மட்டத்துக்கு தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com