Home » , , » நான்கு மாவட்டங்களின் வேட்பாளர் நியமனங்களில் கூட்டமைப்புக்குள் இணக்கம்

நான்கு மாவட்டங்களின் வேட்பாளர் நியமனங்களில் கூட்டமைப்புக்குள் இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நியமனக் குழு கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் தலைமையில் கூடியிருந்தது. இந்த இருநாள் சந்திப்புக்களின்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.


வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமன விடயத்தில் 5 கட்கிகளுக்குமிடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனக் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடியது. இதன்போது மன்னார் மாவட்டத்துக்கான வேட்பாளர் தெரிவில் இணக்கம் காணப்பட்டது.

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளுக்கு தலா இரு வேட்பாளர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புௌாட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு வேட்பாளர்களும் என தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கடசியின் சார்பில் 7 வேட்பாளர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் 4 வேட்பாளர்களையும் ரெலோவின் சார்பில் 3 வேட்பாளர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புௌாட் சார்பில் தலா இரண்டு வேட்பாளர்களையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.வ். சார்பில் தலா இரண்டு வேட்பாளர்களையும் புௌாட், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தலா ஒவ்வொரு வேட்பாளர்களையும் நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 3 வேட்பாளர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 2 வேட்பாளர்களையும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு தலா ஒவ்வொரு வேட்பாளர்களையும் நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட வேட்பாளர் நியமனம் தொடர்பில் நேற்று பிற்பகல் வேட்பாளர் நியமனக் குழு ஆராய்ந்தபோதிலும் பூரண இணக்கம் ஏற்படவில்லை என தெரிகின்றது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com