Home » , , , » முதலமைச்சர் வேட்பாளராக சுவாமிநாதன்?

முதலமைச்சர் வேட்பாளராக சுவாமிநாதன்?

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


 எனினும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

 ஆயினும் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரசாரம் செய்வதில் தான் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை.

 நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில் வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளரான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

 வேட்பாளர் நியமனக் குழு பற்றியும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com