Home » , , » விக்னேஸ்வரனின் தெரிவில் எவ்விதமான அழுத்தங்களும் வரவில்லை:சுமந்திரன்

விக்னேஸ்வரனின் தெரிவில் எவ்விதமான அழுத்தங்களும் வரவில்லை:சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாகவே தெரிவு செய்தனர். விக்னேஸ்வரனின் தெரிவு விடயத்தில் உள்நாட்டலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ எவ்விதமான அழுத்தங்களும் கட்சிக்கு வரவில்லை என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.



நீதிமன்றத்தை பயன்படுத்தி வடக்குத் தேர்தலை நடத்தாமல் விடுவதற்கான சூழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எனவே வடக்குத் தேர்தல் நடைபெறுமா? என்பது எங்களுக்கு சந்தேகமாகவே உள்ளது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை பாதுகாப்போம் என்ற அமைப்பின் சார்பில் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுமந்திரன் எம்.பி. அங்கு மேலும் குறிப்பிடுகையில்

30 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஜூலை மாதம் இதுபோன்ற நாளில் தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் வன்முறை நடந்தேறியது. அப்போது நான் மாணவனாக இருந்ததுடன் வன்முறையின்போது கொழும்பில் பல்வேறு வீதிகளிலும் ஒடித் திரிந்தேன்.

பின்னர் கப்பலில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அப்போதுதான் வடக்கு என்பது எமது தாயகம் என்பதனை நாங்கள் வலுவாக உணர்ந்தோம். தலைநகரில் எங்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பின்னரே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். இதற்கு முன்னர் 1951 ஆம் ஆண்டு மற்றும் 1956 ஆம் ஆண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்றன. ஆனால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. எனினும் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னரே இந்த நகர்வுக்கு இளைஞர்கள் சென்றனர்.

ஆனால் அந்த இருண்ட யுகத்திலிருந்து அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை என்றே தெரிகின்றது. மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கியே பயணிக்கின்றது. 1983 ஆம் ஆண்டு வன்முறையின் பின்னர் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் ஊடாக மாகாண சபை முறைமை வந்தது.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவும் இல்லை. ஆனால் அதனை அடிப்படையாக வைத்து அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு செல்ல முடியுமான நிலைமை காணப்படுகின்றது. ஆனால் அரசாங்கமோ அந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் நீக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாட்டை மீண்டும் பாதகமான சூழலுக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடக்குத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தை பயன்படுத்தி வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் விடும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடலாம் என்றே தெரிகின்றது. இதனை நாங்கள் ஆரம்பத்திலிம் கூறியிருந்தோம். வடக்குத் தேர்தலை நடத்தினாலும் நீதிமன்றத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவே தெரிகின்றது.

பாராளுமன்றத்தினால் செய்ய முடியாததை நீதிமன்றத்தின் ஊடாக செய்ய முயற்சிக்கின்றனர். இது நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாகவே தெரிவு செய்தனர். விக்னேஸ்வரனின் தெரிவு விடயத்தில் உள்நாட்டலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ எவ்விதமான அழுத்தங்களும் வரவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதாவது கட்சிக்கு வெளியிலிருந்து எவ்விதமான அழுத்தமும் வேட்பாளர் விடயத்தில் வரவில்லை.

இதேவேளை கூட்டமைப்பினர் தமது வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமித்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆளும் கட்சியினர் கவலையுடன் இருப்பதாக தெரிகின்றது. விக்னேஸ்வரனை விடுத்து வேறு யாரையாவது வேட்பாளராக நியமித்திருக்கலாம் என்று ஆளும் கட்சயினர் கவலை தெரிவிக்கின்றனர். அது எங்களின் வேலையாகும். அந்தத் தெரிவு தொடர்பில் ஆளும் கட்சியினர் கவலையடையவேண்டியதில்லை. ஆளும் கட்சியினர் தங்கள் வேலையை பார்க்கவேண்டும். நாங்கள் எமது வேலையை பார்க்கின்றோம். யார் பொருத்தமானவர் என்பதனை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com