Home » , , » சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் முறைமையே தமக்கு அவசியம்

சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் முறைமையே தமக்கு அவசியம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் முறைமையே தமக்கு அவசியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக் குழுவினரை, கிளிநொச்சியில் சந்தித்து உரையாற்றிய போதே, தமிழ்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் பரிபூரணமான அதிகார பரவலாக்கலுக்கு இணங்கம் உள்ளதா என்று பிரித்தானிய பிரதிநிதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் நிலவும் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வாக அமையாது என்று குறிப்பிட்டார்.

இது தவிரவும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதன் அடிப்படையிலேயே, சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கலை தமது கட்சி கோருவதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com