Home » » முன்னாள் போராளிகள் 50 பேர் விண்ணப்பித்திருந்தனர்: சுசில்

முன்னாள் போராளிகள் 50 பேர் விண்ணப்பித்திருந்தனர்: சுசில்

'நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் போராளிகள் பலர் விண்ணப்பித்திருந்த போதும் நேர்முகத் தேர்வுக்கு சமூகம் தராததால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.

 யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.

 இவ்வாறு விண்ணப்பத்திருந்தவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்றார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com