ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
உங்கள் அரசாங்கத்துடன் ஏனைய சில கட்சிகளின் உறுப்பினர்கள் யாரேனும் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்களா? என்று ஊடக பிரதானிகளில் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார். இருந்தபோதும், அவ்வாறானவர்களுக்கு தற்போது அரசாங்கத்தின் கதவு மூடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தலுக்கான முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், 13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலும் இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
எந்தவொரு பிரச்சினையாக இருப்பினும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

.jpg)




.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment