Home » » நாளைய இளைஞர் அமைப்பு' வேட்பு மனுத்தாக்கல்

நாளைய இளைஞர் அமைப்பு' வேட்பு மனுத்தாக்கல்

வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 'நாளைய இளைஞர் அமைப்பு' வேட்பு மனுவினை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர். நாளைய இளைஞர் அமைப்பு சுயேட்சைக்குழுவாகவே போட்டியிடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினரே யாழ். மாவட்டத்pல் உள்ள இளைஞர், யுவுதிகள் சார்பாக போட்டியிடவுள்ளனர்.


 சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரான அன்டனி ரங்கதுஷர யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் சுயேட்சைக்குழுவிற்கான வேட்பு மனுவை கையளித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் ஏன் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி பதிலளிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி உட்பட ஜனநாயக மக்கள் சுதந்திரக் கூட்டணி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதனால், சுமார் 100 க்கும் மேற்பட்ட நியமனங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.

 அரசாங்க கட்சிக்கு ஜனாதிபதி மகிந்த ராஷபக்ஷவுக்கும் ஆதரவாகவே சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு தீர்மானித்தாக முதன்மை வேட்பாளர் ரங்க துஷhர தெரிவித்தார்.

 இச் சுயேட்சைக் குழுவில், யாழ். மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com