மக்கள் விடுதலை முன்னணி மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மூன்று மாகாண சபைகளினதும் 9 மாவட்டங்களுக்குமான வேட்புமனுக்களை இன்றுபுதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
பெலவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்புமனுக்களை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளோம்.
மன்னார் மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களை நாம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்யவுள்ளோம்.
மூன்று மாவட்டங்களிலும் எமது 10 முதன்மை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வடமேல் மாகாண சபை தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாநாயக்கவும் வடக்கு தேர்தல் தொகுதியில் சின்னத்துரை ராஜேந்திரமும் முதன்மை வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இதேவேளை, கல்வி அறிவுள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவர்களையே நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தையும் அபிருத்தியையும் கருதி நாம் எமது வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம். வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து எமது தேர்தல் பிரசார வேலைகளை ஆரம்பிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெலவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்புமனுக்களை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளோம்.
மன்னார் மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களை நாம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்யவுள்ளோம்.
மூன்று மாவட்டங்களிலும் எமது 10 முதன்மை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வடமேல் மாகாண சபை தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாநாயக்கவும் வடக்கு தேர்தல் தொகுதியில் சின்னத்துரை ராஜேந்திரமும் முதன்மை வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.இதேவேளை, கல்வி அறிவுள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றவர்களையே நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தையும் அபிருத்தியையும் கருதி நாம் எமது வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம். வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து எமது தேர்தல் பிரசார வேலைகளை ஆரம்பிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment